ஆரோக்கியமும் ஆழ்மனமும்
==========================
நம்மில் எத்தனை பேர், “எனக்கு உடலில் எந்தப் பிரச்சினையும் இல்லை. நான் முழு ஆரோக்கியத்துடன் சுகமாக இருக்கிறேன்.” என்று சொல்லக் கூடும்? இதுவரை அப்படி யாரையும் நான் காண வில்லை. ஒருவேளை இருந்தாலும், விரல் விட்டு எண்ணக்கூடிய அளவில்தான் இருப்பார்கள்.
ஆனால் உண்மை என்ன தெரியுமா? ஆரோக்கியத்தின் ரகசியமே இப்படி சொல்வதுதான். புரியவில்லையா? இன்னும் கொஞ்சம் விளக்கமாக சொல்கிறேன்.
நம் உடலின் செயல்பாடுகள் முழுக்க முழுக்க ஆழ்மனத்தின் கட்டுப்பாட்டுக்குள் தான் இருக்கின்றன. உடலின் எந்தப் பகுதியில் பிரச்சினை என்றாலும், அதை உடனடியாக சரி செய்து மீண்டும் பழைய நிலைக்குக் கொண்டு வரும் சக்தி, நம் ஆழ்மனத்திற்கு இயற்கையாகவே உண்டு.
உடலின் தற்காப்புத் திறன்கள் பற்றி நவீன மருத்துவ உலகமும் நன்கு அறியும். அது செயல்படாமல் போகும் தருணங்களில் தான், நாம் வைத்தியரை நாடும் கட்டாயம் வருகிறது.
நம் உடலுக்குள் அமைந்திருக்கும் அந்த அதிவல்லமை வாய்ந்த வைத்தியர், சமயங்களில் செயல்படாமல் போவதற்கு என்ன காரணம்? மீண்டும் நம் எண்ணங்கள் தான்…
சதாசர்வ காலமும் தன் உடல் உபாதைகளைப் பற்றியே பேசிக் கொண்டிருக்கும் சில நபர்களை நீங்கள் பார்த்திருப்பீர்கள். எந்தப் பேச்சை எடுத்தாலும், கடைசியில் தனக்கு உள்ள ஏதேனும் ஒரு நோய், அல்லது வலி, அல்லது சக்தியின்மை, இவற்றில் வந்துதான் பேச்சை முடிப்பார்கள்.
அவர்களுக்கு எண்ணம் முழுவதுமே, தன் இயலாமையைப் பற்றியதாகத்தான் இருக்கும். எண்ணங்கள் எவையாயினும், நம் மனதை அதிக நேரம் ஆக்கிரமிக்கும் போது, அவை நம்பிக்கையாகி விடுகின்றன.
அதாவது, “நான் ஒரு நிரந்தர நோயாளி” என்று சதா சர்வ காலமும் சிந்தித்துக் கவலைப் படுபவனுக்கு, அந்த எண்ணமே நம்பிக்கையாகி விடுகிறது.
நம் புற மனம் எதை உண்மையென்று நம்புகிறதோ, அதை ஆழ்மனம் கட்டளையாக பாவிக்கிறது. விளைவு, தன் எஜமானனின் கட்டளைக்கிணங்க, அவரை நிரந்தர நோயாளியாக வைத்திருக்க என்னவெல்லாம் செய்ய வேண்டுமோ, அதையெல்லாம் விசுவாசமாக செய்து கொண்டிருக்கிறது.
உங்களுக்கு ஏற்படும் சிறு சிறு உபாதைகளைக் கண்டும் காணாமல் இருங்கள். வழக்கமாக செய்வதுபோல், சின்ன வலியைக் கூட, பூதக் கண்ணாடியை வைத்துப் பார்த்துப் பெரிதாக்கி, அதையே காரணமாக வைத்து வேலைகளை ஒத்திப்போடுவது, ஓரங்கட்டுவது, அல்லது அடுத்தவர்களிடம் ஒப்படைப்பது போன்ற செயல்கள், உங்களையும் அறியாமல் நீங்கள் உங்கள் நோய்க்கு வழங்கும் சிவப்புக் கம்பள வரவேற்பாக அமையும்.
வலித்தால்கூட, “என் அடிமை ஒரு கைதேர்ந்த வைத்தியன்".அவன் இதை இன்று மாலைக்குள் சரி செய்து விடுவான். அவனிருக்க எனக்கென்ன கவலை? என் வேலையை நான் பார்க்கிறேன்" என்று நகைச்சுவையோடும், அதே சமயம் பெருமிதத்தோடும் எண்ணிக் கொள்ளுங்கள்.
அவ்வப்போது, “வலி இப்போது சற்றுக் குறைந்திருக்கிறது. வைத்தியர் தீவிரமாக வேலை செய்கிறார் போலும்” என்று உங்களுக்கு நீங்களே சொல்லிக் கொள்ளுங்கள். அதிசயிக்கத் தக்க விதத்தில், அன்று மாலைக்குள் உங்கள் நோய் நீங்கிவிடும்.
சரி, நோய்களை நீக்கி ரட்சிக்கும் சக்தி படைத்த நம் ஆழ்மனம், நோய்களை வராமலே தடுத்தாலென்ன? இதுதான் நம் அடுத்த கேள்வி. அதுவும் சாத்தியமே. நாம் அந்த கட்டத்தை நோக்கித்தான் முன்னேறிக் கொண்டிருக்கிறோம்.
முதலில் இருக்கும் நோய்களை நீக்கும் பணி முடிய வேண்டும். அதற்குத்தான் மேற்சொன்ன பயிற்சி. எந்த அளவுக்கு நம் நோயைப் பற்றி நாம் நினைத்துக் கவலைப் படுகிறோமோ, அந்த அளவுக்கு அவை நம் உடலில் பலமாக வேரூன்றும்.
ஏற்கனவே நம் அறியாமை காரணமாகப் பல நோய்களை இப்படி நாம் வேரூன்ற வைத்திருப்போம். அவற்றை வேரறுக்கும் பணியில் நம் வைத்தியர் சிரத்தையாக இருப்பார்.
ஒவ்வொரு நோயையும் குணமாக்க, அதன் தீவிரத்துக்குத் தகுந்தாற்போல் காலமும் நம்பிக்கையும் தேவையாகிறது. உதாரணத்துக்கு, சாதாரண தலைவலி, ஜலதோஷம், போன்ற நோய்களை, ஒரே நாளில் போக்கிக் கொள்ளலாம்.
ஆனால் நாட்பட்ட நோய்களையும், தீவிர நோய்களையும் குணமாக்க, அதிக நம்பிக்கை தேவைப்படுகிறது. எனவே, எடுத்த எடுப்பில் “என் சர்க்கரை வியாதி இன்றே குணமாகிவிடும்” என்று சொல்லிக்கொண்டு, மாலையில் சென்று சோதித்துப் பார்க்காதீர்கள். ஏனெனில், சின்ன விஷயங்களை சோதித்துப் பார்க்கும்போது, உங்கள் புறமனம் ஒத்துழைக்க வாய்ப்புள்ளது.
பெரிய விஷயங்களை உடனே மாற்ற முடியும் என நீங்கள் நினைத்தாலும், அறிவுஜீவியான உங்கள் புறமனம் அதை நினைத்து கூட பார்க்க விரும்பாது.
இந்த கனத்தில் என் உடல் எல்லா விதத்திலும் மேம்பாடு அடைந்து கொண்டே இருக்கிறது. தகவலை மாற்றினால் அனைத்தையும் மாற்றலாம்.