மனித இயக்கத்தின் உள்ள 96 பிரபஞ்ச தத்துவங்கள்..!

மனித இயக்கத்தின் உள்ள 96 பிரபஞ்ச தத்துவங்கள்..!

சித்தர்கள் ஆன்மீகவாதிகள் போல வெளிப்பார்வைக்குத் தோன்றினாலும் உண்மையில் அவர்கள் விஞ்ஞானிகளே. மெய்ஞானத்தோடு இணைத்து உடல் அறிவியலை எளிய மக்களுக்குப் புரியும்படி எடுத்துரைத்துள்ளார்கள்.
அறிவு -.1 புத்தி 
 
வினைகள் -.2 நல்வினை, தீவினை 
 
ஆசைகள் -.3 மண், பொன், பெண் 
 
அந்த கரணங்கள்-.4 மனம், புத்தி, அகங்காரம், சித்தம் 
 
பஞ்சபூதங்கள்-.5 (பிருதிவி/பூமி/நிலம்/மண்),(அப்பு/ஜலம்/ நீர் / புனல்) , (தேயு / அக்னி / நெருப்பு / அனல்), (வாயு / கால் / கற்று / கனல்), (ஆகாயம் / வெளி / வானம் / விசும்பு) 
 
பஞ்ச ஞானேந்திரியங்கள்….5  மெய், வாய், கண், மூக்கு, செவி 
 
பஞ்ச கன்மேந்திரியங்கள்-.5 (வாக்கு-வாய், பாணி-கை, பாதம்-கால், பாயுரு-மலவாய், உபஸ்தம்-கருவாய்) 
 
பஞ்ச தன்மாத்திரைகள்.-.5 (சுவை-ரசம், ஒளி-ரூபம், ஊறு- ஸ்பரிசம், ஓசை-சப்தம், நாற்றம்-கந்தம்) 
 
பஞ்சகோசங்கள்-.5 (அன்னமய கோசம், பிராமணய கோசம், மனோமய கோசம், விஞ்ஞானமய கோசம், ஆனந்தமய கோசம்) 
 
மூன்று மண்டலங்கள-.3 ( அக்னி மண்டலம், சூரிய மண்டலம், சந்திர மண்டலம் ) 
 
குணங்கள்-.3 ராஜசம், தாமசம், சாத்வீகம். 
 
மலங்கள்-.3 ஆணவம், கன்மம், மாயை 
 
பிணிகள்-.3 வாதம், பித்தம், சிலேத்துமம். 
 
ஏடணை-.3 லோக ஏடணை, அர்த்த ஏடணை, புத்திர ஏடணை. 
 
ஆதாரங்கள்-.6 மூலாதாரம், சுவாதிஷ்டானம், மணிபூரகம், அனாகதம், விசுத்தி, ஆஞ்ஞா 
 
அவஸ்தைகள்-.5 சாக்கரம்-நனவு, சொப்பனம்-கனவு, கழுத்தி-உறக்கம், துரியம்-நிஷ்டை, துரியாதீதம்-உயிர்ப்படக்கம். 
 
தாதுக்கள்-.7 இரசம், இரத்தம், மாமிசம், மேதஸ், அஸ்தி, மச்சை, சுக்கிலம்/சுரோனிதம் 
 
ராகங்கள்.-.8 காமம், குரோதம், லோபம், மோகம், மதம், மாச்சர்யம், இடம்பம், அகங்காரம். 
 
தசநாடிகள்-.10 இடகலை/இடபக்க நரம்பு/பிங்கலை /வலபக்க நரம்பு, சுழுமுனை/நாடு நரம்பு/ சிகுவை/உள்நாக்கு நரம்பு, புருடன்/வலக்கண் நரம்பு, காந்தாரி/இடக்கண் நரம்பு, அத்தி/வலச்செவி நரம்பு, அலம்புடை/இடச்செவி நரம்பு, சங்கினி/கருவாய் நரம்பு, குகு/மலவாய் நரம்பு. 
 
தசவாயுக்கள்-.10 பிராணன்/உயிர்க்காற்று/ அபாணன்/ மலக்கற்று, வியானன்/தொழிற்காற்று,உதானன்/ஒலிக்காற்று, சமானன் /நிரவுக்காற்று, நாகன்/விழிக்காற்று,கூர்மன்/இமைக்காற்று, கிருகரன்/ தும்மல்காற்று,தேவதத்தன்/கொட்டாவிக்காற்று, தனஞ்செயன்/வீங்கல் காற்று ஆகியன. 

மனிதனின் ஒருநாள் சுவாச எண்ணிக்கை 21600 என்றும் இது கூடுவதும் குறைவதும் என்று நிலை மாறினால் ஆயுள் குறையும் என்றும் , 21600 முறை தினமும் மூச்சுவிடக்கூடிய மனிதன்1 120 ஆண்டுகள் வாழ முடியும் என்றும் சித்தர்கள் கணித்துள்ளனர்.

முறையற்ற வாழ்க்கைப்போக்கை மேற்கொள்பவர்களுக்கு சுவாசம் அதிகரித்து ஆயுள் குறைகிறது என்கிறார் திருமூலர்(திரும
ந்திரம்-729). 

முறையான மூச்சுப் பயிற்சியை மேற்கொண்டு நடுமூச்சைச்சார்ந்து சுவாசிக்கக் கற்றால் 166 ஆண்டுகள் வரையிலும் வாழலாம் என்கிறார் இப்பாடலில்.

குண்டுக்குறியிட்ட வரிசையின் உறுப்பினர்
முதுமையில் அல்லது நோயினால் இறக்கும் தருவாயில் உள்ள ஒருவருக்கு மரணம் எத்தனை நாட்களுக்குள் ஏற்படும் என்பதையும் துல்லியமாகக் கணித்துள்ளனர். 

மற்றவர் புருவத்தைப் பார்த்தால் தெரியாதவர்களுக்கு 9 நாளிலும்,காது கேட்காவிட்டால் 7 நாளிலும்,நட்சத்திரம் தெரியாதவர்களுக்கு 5 நாளிலும்,மூக்குநுனி தெரியாதவர்களுக்கு 3 நாளிலும், இரண்டு கண்களையும் கையால் அமுக்கினால் கண்ணீர் வராதவர்களுக்கு 10 நாளிலும் மரணம் வரலாம் என்கிறார்கள் சித்தர்கள்.

சித்தர்கள் ஆன்மீகவாதிகள் போல வெளிப்பார்வைக்குத் தோன்றினாலும் உண்மையில் அவர்கள் விஞ்ஞானிகளே. மெய்ஞானத்தோடு இணைத்து உடல்அறிவியலை எளிய மக்களுக்குப் புரியும்படி எடுத்துரைத்துள்ளார்கள்.

யோகம் பற்றிய தகவலுடன் தொடர்ந்து பயனிப்போம்!!! 
 
"ஆரோக்ய வாழ்வுக்கு யோகம் அவசியம் என்பதை அனைவருக்கும் தெரியப்படுத்தி ஆரோக்ய பாரதத்தை உருவாக்குவோம்"
Post a Comment (0)
Previous Post Next Post