மகளிர் சாதனைகள்

மகளிர் சாதனைகள்


வலிகளை உணர்வாக்கி இன்பத்தை கருவாக்கி என்னை மனிதர் ஆக்கியவர்  நீர் மட்டுமே!


எனது வேதனைகள் சாதனைகள் ஆனதற்கு நீர் குடுத்த ஊக்கமும் அன்பும் மட்டுமே காரணம்!


நாங்கள் அடுப்பு மட்டும் அல்ல. நம் தாய் நாட்டின் இரும்பு என்று இந்தியாவிற்கு உணர்தியவர்கள்  நீர் மட்டுமே!


கருணையின் உருவம் என்று உலகமே கொண்டாடப்பட்ட அன்னையும் நீர் தானே!


அக்கறை என்ற சொல்லி மேல் ஒரு கறை எப்பொழுதும் படிந்து இருக்கும். 

ஏன் என்றால் 

என் பிறப்பிலும் நீ அழுதாய்! 

என் குழந்தை பேச்சிலும் நீ சந்தோஷத்தில் அழுதாய்! 

என் இறப்பிலும் நீ அழுகிறாய்! 

ஆனால் என்னால் நீர் பொறுத்தது

  வலிகள் மட்டுமே! 


என் உள்ளம் தோன்றியது இல் இருந்து என் உள்ளம் மறையும் வரை நீர் என் மேல் காட்டும் அன்பிற்கு இவ்வுலகம் ஈடாகாது!


இன்று நான் உன்னை ஒதுக்கி மற்றவர்கள் எனது எழுத்துக்களை அழகு என்கின்றனர்.

அன்று நீர் மற்றவர்களை ஒதுக்கி என்னை நெருங்கி, என் கைகளை  பிடித்து  எழுதிய முதல் எழுத்தை அழகு என்றனர் மற்றவர்கள். 


வாழ்த்தும் மனம்,

பாராட்டும் குணம்,

கண்ணீரை தாங்கி பிடிக்க மனைவி,

வலிகளுக்கு தோல் கொடுக்க தோழி,

பசியை போக்குவதில் அம்மா,

அன்பு என்ற கோவில் கிரகம்,

சோதனைகளை சாதனை ஆகியது விண்வெளியில் நீர் மட்டுமே! 


வாழ்க நீர் பல்லாண்டு!

தொடரட்டும்  உன் தொண்டு !

வளர்க நீர் அருவியாய்!
Post a Comment (0)
Previous Post Next Post