சரியில்லை !! சரியில்லை !!

சரியில்லை !! சரியில்லை !!
அது சரியில்லை ? இது சரியில்லை ? அவர்கள் சரியில்லை ? வருமானம் சரியில்லை ? உறவு சரியில்லை ? உடல் சரியில்லை ? இதுபோல ஆயிரம் சரியில்லை ?? ( சரியானவன் ஒருவனே ஆண்டு அருளும் அண்டத்தில் எப்படி சரியில்லாதது நடக்கிறது ??? )





சரியில்லை என்று ஆயிரம் பார்க்கிறோம் ? சொல்கிறோம் ? சரியாகவேண்டும் என்றும் எதிர்பார்க்கிறோம் ??!!

சரியாக இயங்கும் கோடியில் இருந்து ? 
சரியில்லை என்று ஆயிரமே பார்க்கிறோம் ? சொல்கிறோம் ? 
அதுவும் சரியாகவேண்டும் என்றும் எதிர்பார்க்கிறோம் ???

நீங்கள் சரியில்லை என்று கருதும் ஆயிரத்தில் அதையே அவர்கள் அளவில் சரியென்றும் வாழும் கூட்டமும் இருக்கத்தானே செய்கிறது !!

உங்கள் பார்வையில் சரி / தவறு என்று கருதும் யாவும் இறைவன் திருவருளில் சரியே !!

பின் ஏன் சரியில்லை என்று எனக்கு தோன்றுகிறது ??

சரியில்லை என்று உங்களுக்கு தோன்றும்படி காட்டும் இறைவன் !! 
நீ சரியில்லை என்று உன்னை உணர்த்தவே !!

சரியில்லையை வெளியே தேட தெரிந்த நமக்கு !! 
சரியில்லை உனக்குள்ளேயே இருக்கு என்று உன்னுள் பார்க்க தெரியவில்லை !!

பறந்து விரிந்து எதுமாகி யாதுமாகி நிறைந்து இருக்கும் இறைவனை அனுபவிக்கும் நாம் !! 
நாம் அளவுக்கு ஓர் சிறிய வட்டத்துள் வாழ்ந்து / பார்த்து / கருதி / குறை கூறி / குற்றம் சாட்டி !! வாழ வரவில்லை என்ற மெய்யை உணர்வோம் !!

மாற்றமே நிரந்திரம் !! 
இத்தனை காலம் வாழ்ந்த வாழ்வில் எத்தனையோ எதிர்த்த மாற்றம் / விரும்பிய மாற்றம் / விரும்பா மாற்றம் / ஏங்கிய மற்றம் என்று எத்தனையோ கடந்து வந்தாலும் யாவும் ஏற்கும் மாற்றமாகவே இருக்கும் போது !!

நம்முள் சரியாகவேண்டியது உள்ளது என்று உணர்ந்து !! 
சரியாக சரியாக்குபவனை பற்றி !! 
நாம் நாமாக இருக்கு செய்பவன் !! 
நம்முள்ளும் அது கடந்தும் ? கடந்தும் ? விரிந்தும் இருக்கிறான் !! 
அவனே சரியானவன் !! 
அவனையே சரியில்லாதவன் என்று சொல்பவனையும் கண்டுகொள்ளாது ? அவனுக்கும் சரியே அருளிகொண்டே இருப்பவன் திருவருளால் !!
எல்லாம் சரியாவே இருக்கிறது !! நடக்கிறது !! நடக்கும் !! 
சரியாக வேண்டியது நான் மட்டுமே !! என்று உணர்ந்து அனுபவிப்போம் !!

உங்கள் சரிக்கும் / தவறுக்கும் நீங்கள் தான் பொறுப்பு !!

ஆனால் எல்லாம் சரியாகவே நடக்கிறது என்பது மட்டுமே நிதர்சனம் !!

அதை ஏற்ப்பதும் ? மறுப்பதும் ? உனக்கு அளிக்கப்பட்ட சுகந்திரம் !!!

எப்படியும் ஏற்றுத்தான் ஆகவேண்டும் என்பதே நிதர்சனம் !!

நிதர்சனமானவன் திருவருளை அனுபவிக்க்றோம் என்று உணர்வுட்டியவன் திருவருளால் !!

சிவானந்த சித்தன்
Post a Comment (0)
Previous Post Next Post