மனம்

♦ மனம் என்பது ஒருபோதும் அமைதியாக இருக்க முடியாது 


ஒரு மனிதர் அமைதியாக இருக்கிறார் என்றால் 

அதன் பின்னால் அவர் மனமற்று இருக்கிறார் என்றுதான் பொருள் 

மனம் இருக்கும் வரையில் ஒரு
மனிதன் அமைதியாக இருக்க முடியாது 

அப்படி மனம் இல்லாமல் 
இருக்கும் போது 

நீங்கள் உங்கள் உடலை 
உணர முடியாது

ஏனெனில் 

மனம் என்பதன் வழியாகத்தான் நீங்கள் உடல் என்பதை உணர்கிறீர்கள் 

மனம் என்பது இல்லாத போது 

நீங்கள் என்பது இந்த உடல்தான் என்று உங்களால் உணர முடியாது 

இந்த உடல்  உங்களது தன்னுணர்வில் இருந்து மறைந்து போய் விடும் 

அங்கே உடலும் இருக்காது மனமும் இருக்காது 

சுத்த இருப்பு நிலை மட்டுமே எஞ்சி நிற்கும் 

அத்தகைய சுத்த இருப்பு நிலைதான் உண்மையான அமைதி 

இந்த அமைதியை அடைவது 
எப்படி..??? 

நீங்கள் வெளியே எதைச் செய்தாலும் 

அது பயனற்றதாகத்தான் இருக்கும் 

செய்தலுக்கும் அமைதிக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது 

மனம் என்பது இல்லாதபோது 

ஆத்மாவானது அமைதியாக 
இருக்கும்போது 

இந்த உடல் அதை நிழல் போல்
பின் தொடருகிறது 

அப்போது உடல் ஒரு குறிப்பிட்ட 
ஆசனத்தை ஓய்வு நிலையை எடுக்கிறது 

ஆனால் இதை நீங்கள் அப்படியே மாற்றிச் செய்ய முடியாது 

நீங்கள் முதலில் ஒரு ஆசனத்தில் அமர்ந்து 

அதன் பிறகு அமைதியை பின் தொடர வைக்க முடியாது 

புத்தருக்கு முதலில் அக நிகழ்வு 
நடந்தது 

#அதன் பிறகு அந்த அமரும் நிலை பின் தொடர்ந்தது 

#எனவே வெளியில் இருந்து நீங்கள் ஆரம்பிக்கும் போது 

#ஒரு பொய்யான நிலையை 
உருவாக்குகிறீர்கள் 

#உண்மை நிலை எப்போதும் மையத்தில் தான் ஆரம்பிக்கும் 

#அதன் பின்னர் தான் அதன் அலைகள் மேற்பரப்பிற்கு வந்து சேரும் 

#உங்களுக்குள் உள்ள மையம் 
அமைதியில் இருக்கிறது 

#ஆகவே முதலில் அங்கிருந்து 
ஆரம்பியுங்கள்...
Post a Comment (0)
Previous Post Next Post