"அகத்தியர் மூலிகை மர்மம் " -௧
★ நாவல் வேர் கொட்டை பொடியை தேனில் உண்ண கிராணி மூலம் நீங்கும்.
★ சித்திரமூலத்தை உலர்த்தி பொடித்து குடிநீராக்கி குடிக்க பித்தம் சீதக்கழிச்சல் பெருவயிறு(தொந்தி) எலும்பு சுரம் நீர்வேட்கை தீரும்.
★ நிலாவாரை பொடியை சுடுநீரில் கொள்ள பெருவயிற்றை(தொந்தி) குறைக்கும்.
★ தும்பையை குடிநீராக்கி குடிக்க கொடிய பித்தம் நீங்கும்.
★ கரிசலாங்கண்ணி பெண்களை வசியப்படுத்தும் கண்நோய்கள் வெளுப்பு நோய் இருமல் ஆகியவற்றை நீக்கும்.
★ ஆவாரை பிரமேக நோயை நீக்கும்.
★ சங்கங்குப்பி வேரப்பொடி மேகநோய்களை நீக்கும்.
★ தழுதாழை சமூலம் பித்தம் வாதம் தொடர்பான சூலை நோய்களை போக்கும்.
★ முடக்கத்தான் இலை முடக்குவாதம் பிடிப்புகள் மலக்கட்டு சீதக்கழிச்சல் ஆகியவற்றை நீக்கும்.
★ முட்காவேளை சமூலத்தை குடிநீராக்கி குடிக்க கழிச்சல் காசம் சுரங்கள் தீரும் காயகற்ப மூலிகை.
★ கொல்லங்கோவை கிழங்கை பாலில் அவித்து உண்ண விஷக்கடிகள் நீங்கும்.
★ முத்தக்காசால் மூலம் வயிற்று கேடுகள் வாந்தி நீர்வேட்கை நீங்கும்.